Monday, Mar 3, 2025

கோவில் நிகழ்ச்சியில் திடீரென சரிந்த மேடை - பெண் ஒருவர் பலி - 17 பேர் காயம்!

Viral Video Delhi Death
By Sumathi a year ago
Report

மேடை சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேடை சரிந்து விபத்து 

டெல்லி கல்காஜி கோயிலில் இரவு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பக்தர்கள் அமர்வதற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 1600-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

delhi-kalkaji-temple

திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில், மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.

மண மேடையில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் போது மயங்கி விழுந்த மாப்பிள்ளை - துடிதுடித்து கதறிய மணப்பெண்

மண மேடையில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டும் போது மயங்கி விழுந்த மாப்பிள்ளை - துடிதுடித்து கதறிய மணப்பெண்

 பெண் பலி

தகவலறிந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் விசாரணையில், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், விஐபி-க்களின் குடும்பத்தினரை கூடுதலாக அமர வைத்தனர். இதனால், மர மேடை, அதிக எடையை தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து, கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை. எனவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாதா ஜாக்ரன் என்ற அமைப்பு இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கல்காஜி கோயிலில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.