தலைமை செயலகத்திலிருந்து தெறித்து ஓடிய ஊழியர்கள் - நடந்தது என்ன?
தலைமை செயலக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் அங்குள்ள ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியே ஓடினர்.
தலைமைச் செயலகம்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 தளங்கள் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று(24.10.2024) காலை 11;30 மணியளவில் கட்டிடத்தில் சத்தத்துடன் அதிர்வு கேட்டதாக கூறி ஊழியர்கள் பதற்றத்துடன் அந்த கட்டிடத்திலிருந்து வெளியே ஓடினர்.
அமைச்சர் ஆய்வு
இதன் பின் உடனடியாக காவல்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். விசாரணையில் முதல் தளத்தில் சத்தத்துடன் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனாலும் அச்சத்தின் காரணமாக ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை. தற்போது விரிசலை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டுள்ளது.
தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், புதிய கட்டிடம் வேண்டுமென்று அங்குள்ள ஊழியகள் சிலர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.