472 வருடங்களாக கெடாத உடல்; குவியும் மில்லியன் பக்தர்கள் - யார் இந்த ஃபாதர்?

goa
By Sumathi Nov 27, 2024 06:00 PM GMT
Report

பதப்படுத்தப்பட்ட உடலை நேரில் காண கிறிஸ்துவ மக்கள் குவிந்து வருகின்றனர்.

பிரான்சிஸ் சேவியர்

கோவாவில் Basilica of Bom Jesus என்ற பழமையான தேவாலயம் உள்ளது. இங்கு புனிதர் பிரான்சிஸ் சேவியர் என்ற இறைப் பணியாளரின் உடலை கடந்த 472 வருடங்களாகப் பதப்படுத்தி வைத்துள்ளனர்.

francis xavier body

இதற்காக ஒரு கண்காட்சி இந்தத் தேவாலயம் சார்பாக நடத்தப்படும். அப்போது மட்டுமே உலகம் எங்கிருந்தும் மக்கள் காண்பதற்கு அனுமதி அளிக்கப்படும். அதன்படி, 18 ஆவது கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதில் அந்த பாதரின் உடலை வரும் 2025 ஜனவரி 5 ஆம் தேதி வரை காணலாம். கடந்த 2014 நடத்த கண்காட்சிக்கு சுமார் 5.5 மில்லியன் மக்கள் வருகை தந்திருந்தனர். அதைவிட இந்த ஆண்டு அதிக பக்தர்கள் வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி பேராயர் அனில் குடோ,

பெண்களாக மாறும் ஆண்கள் .. 232 ஆண்டுகளாக நள்ளிரவில் நடக்கும் வினோத பூஜை!

பெண்களாக மாறும் ஆண்கள் .. 232 ஆண்டுகளாக நள்ளிரவில் நடக்கும் வினோத பூஜை!

18 ஆவது கண்காட்சி

"ஏசு கிறிஸ்துவின் நற்செய்தியை உலகம் முழுவதும் அறிவிப்பதே புனித பிரான்சிஸ் சேவியர் ஒரு பணியாக இருந்தது. அதற்காகக் கிராமம் தோறும் அலைந்தார். வீடு வீடாகப் போய் மக்களைச் சந்தித்தார். ஜெபத்திற்காக நீண்ட காலத்தை அவர் செலவிட்டார். அவர் மறைந்து 470 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன.

Basilica of Bom Jesus

அவரது உடல் இதுவரை அழியாமல் உள்ளது. அவர் உடலிலிருந்து துர்நாற்றம் வரவே இல்லை. இவர் மார்ச் 1554 இன் நடுப்பகுதியில் ஷாங்சுவான் தீவிலிருந்து மலாக்கா வழியாகக் கப்பலில் கோவா வந்தடைந்தார். அவர் மறைந்தும் பக்தர்கள் அவரைக் காண இன்றும் லட்சக்கணக்கில் வருகை தந்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.