நடிகர் சுஷாந்த் சிங்கின் செல்ல வளர்ப்பு நாய் இறந்தது...!

Viral Photos Death Sushant Singh Rajput
By Nandhini Jan 17, 2023 10:24 AM GMT
Report

பாலிவுட் பிரபல நடிகர் சுவாந்த் சிங் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தனது 34 வயதில் மும்பையில் உள்ள பாந்த்ரா அடுக்குமாடி குடியிப்பு இல்லத்தில் இறந்து கிடந்தார். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுஷாந்த்தின் வளர்ப்பு நாய் இறந்தது

இந்நிலையில், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வளர்த்த செல்ல நாய் ஃபட்ஜ் இன்று அதிகாலை இறந்தது.

இத்தகவலை நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி பிரியங்கா சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இவ்வளவு நேரம் ஃபட்ஜ்! உங்கள் நண்பரின் பரலோகப் பிரதேசத்தில் சேர்ந்துள்ளீர்கள்... விரைவில் பின்பற்றப்படும்! அதுவரை... மனம் உடைந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

வரும் ஜனவரி 21ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிறந்தநாள். பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு அவருடைய வளர்ப்பு நாய் இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்களைப் பார்த்த அவரது ரசிகர்கள்  இருவரும் சொர்க்கத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

ssr-s-pet-fudge-dies--fans-sad-viral-photos