தமிழகம் முழுவதும் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
12, 467 பள்ளிகளில் படிக்கும் 8,82, 806 ஆயிரம் மாணவர்களும், தனித் தேர்வர்களாக 26 ஆயிரம் பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.
காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, அதை படிக்க 10 நிமிடங்கள் நேரம் வழங்கப்படும்.
அதன் பின்னர் விடைத்தாள் வழங்கப்பட்டு, தேர்வர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து கையெழுத்து போட வேண்டும்.
தேர்வு பணிக்காக 49,500 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முறைகேடுகளை தடுக்க 5000 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தெரிவிக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 9498383075 மற்றும் 9498383076 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.