10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

Tamil nadu Anbil Mahesh Poyyamozhi
By Jiyath Nov 16, 2023 04:46 AM GMT
Report

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ் 

தமிழநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த பொதுத்தேர்வுக்காக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! | Sslc Plus 1 Plus2 Public Examination Schedule

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் சுமார் 27 லட்சம் மாணவ மாணவிகள் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ளார்கள். அந்த வகையில் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு அட்டவணை 

அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 12 முதல் 17 வரை 12ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும்.

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! | Sslc Plus 1 Plus2 Public Examination Schedule

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 19 முதல் 24 வரை 11 ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதி வெளியாகும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடையும். பிப்ரவரி 23 முதல் 29 வரை 10ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.