எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் காவல்

murder trichy ssiboominathan
By Irumporai Nov 23, 2021 03:50 AM GMT
Report

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன், ஆடு திருடர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 8 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் மணிகண்டன் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனை மட்டும் கீரனூர் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு:  கைதான  2 சிறார்களுக்கும் 15 நாட்கள் காவல் | Ssi Murder 2 Minors Detained For 15 Days

இந்த நிலையில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது .

இரண்டு சிறார்களும் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றம் குழுமத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார் நீதி குழு நீதிபதி அறிவு உத்தரவை அடுத்து, இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர் .

இந்த இரண்டு சிறுவர்களும் புதுகையை சேர்ந்த 5 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.