ஆர்.எஸ்.எஸ். பேரணி : நிபந்தனைகளை அறிவித்த டிஜிபி
ஆர்எஸ்எஸ் நடத்த உள்ள பேரணிக்கான நிபந்தனைகளை வெளியிட்டார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு.
ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழ்நாட்டில் வரும் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியில் ஈடுபட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நிபந்தனைகள்
பேரணியின்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையில் பேரணியை நடத்த வேண்டும்
பேரணியின்போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும்
பேரணியில் பங்கேற்போர் எந்தவிதமான குச்சி, லத்தி போன்ற காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்ல கூடாது
சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடல்களை பாடவோ, கோஷமிடவோ கூடாது என உத்தரவிட்டுள்ள டிஜிபி, நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்