காதலருக்காக அப்பா கமல்ஹாசனை ஓரம் கட்டிய மகள் ஸ்ருதிஹாசன் - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Kamal Haasan Vikram Movie
By Thahir May 16, 2022 09:13 PM GMT
Report

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசன் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விக்கரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,கிரிஷ் சங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் வருகிற ஜுன் 3-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் பத்தல பத்தல பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார். இதனிடையே இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

காதலருக்காக அப்பா கமல்ஹாசனை ஓரம் கட்டிய மகள் ஸ்ருதிஹாசன் - ரசிகர்கள் அதிர்ச்சி..! | Sruthi Hasan Who Sidelined Kamal Haasan

தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அவரின் மகள் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளாததால்,ரசிகர்கள் பலரும் அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

காதலருக்காக அப்பா கமல்ஹாசனை ஓரம் கட்டிய மகள் ஸ்ருதிஹாசன் - ரசிகர்கள் அதிர்ச்சி..! | Sruthi Hasan Who Sidelined Kamal Haasan

மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசாருடன் லிவ்விங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

தனது காதலருடன் பப்பு,ஷாப்பிங் என பல இடங்களில் சுற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று அப்பாவின் பட விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

பல முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில்,ஸ்ருதி மட்டும் பங்கேற்கவில்லை. இதனிடையே ஏதும் பிரச்சனையா அப்பாவுக்கும் உங்களுக்கும்,என்ன காரணம்? காதலருக்காக அப்பாவை ஓரம் கட்டி விட்டீர்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.