SRM நடத்தும் சொல் தமிழா சொல் பேச்சுப் போட்டி - வேலூர் மண்டலம்
சொல் தமிழா சொல்
SRM குழுமத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு 40 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் மிகப் பிரம்மாண்டமாக 'சொல் தமிழா சொல் 2025 பேச்சுப் போட்டி' நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 9 மண்டலங்களாகப் பிரித்து ஒரு கோடி ரூபாய் செலவில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
மண்டல அளவிலான பரிசுகளாக முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.75,000, மூன்றாம் பரிசு ரூ.50,000 ஆறுதல் பரிசு ரூ.20,000/- (5 நபர்களுக்கு) என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவிலான பரிசுகளாக முதல் பரிசு ரூ.5,00,000, இரண்டாம் பரிசு - ரூ.3,00,000, மூன்றாம் பரிசு - ரூ.2,00,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மண்டலம்
இதில் வேலூர் மண்டலத்திற்கான போட்டி தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர், (Sacred Heart College, Thirupathur)-ல் வைத்து நடைபெற உள்ளது. போட்டிக்கான நாள் 02.02.2025 ஆகும்.
போட்டிகள் பற்றிய விரிவான விவரங்களை அறிய கீழே உள்ள க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் https://forms.gle/44ud2xALLGqLgNoC7 என்ற இணைப்பில் கிளிக் செய்து தேவையான விவரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தலைப்புகள்
வேலூர் மண்டல முதல் சுற்றுக்கான முதல் சுற்றுக்கு 6 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
1. வீரத்தின் விளைநிலம் வேலூர் மாவட்டம்
2. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
3. அரசியலில் நேர்மையும் தூய்மையும்
4. அண்மைக்கால அறிவியல் வளர்ச்சி
5. இயற்கையைக் காப்போம்
6. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்
விதிமுறைகள்
1. இத்தலைப்புகள் வேலூர் மண்டலத்திற்கானது மட்டுமே.
2. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் குலுக்கல் முறையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் பேச வேண்டும்.
3. இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும் பங்கேற்கலாம்.
4. வயது வரம்பு 18 முதல் 25 வரை (ஏப்ரல் 30, 2025க்குள்) 25 வயதுக்கு உட்பட்டவராக இருந்தல் வேண்டும்.
5. போட்டியாளர் காலை 9 மணிக்குள்ளாகப் போட்டி நடைபெறும் கல்லூரிக்கு வரவேண்டும்.
6. மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனம் இருக்கும் மாவட்டமே அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்டதாகும்.
7. கால அளவு 4 நிமிடங்கள் 8. நடுவர்களையோ, தன்னைப் பற்றியோ குறிப்பிடாமல் நேரடியாகத் தலைப்பையொட்டிப் பேச வேண்டும்.
9. நடுவர்களின் முடிவே இறுதியானது.
கூடுதல் விவரங்களுக்கு 044 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.