சொல் தமிழா சொல் - SRM நடத்தும் மாபெரும் பேச்சுப் போட்டி
SRM குழுமத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் 'சொல் தமிழா சொல் 2025 பேச்சுப் போட்டி' நடத்தப்படுகிறது.
போட்டி நடைபெறும் இடம் : எஸ்ஆர்.எம். மேலாண்மையியல் புலம், (Faculty of Management) (MBA), காட்டாங்குளத்தூர்.
போட்டி நடைபெறும் நாள் 26.01.2025
தலைப்புகள்
இதில் சென்னை மண்டலத்தின் முதல் சுற்றுக்கு 6 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
1. போற்றப்பட வேண்டிய பெண் ஆளுமைகள்
2. ஊழலில்லா அரசியல்
3. மனிதர் சுயநலமும் காலநிலை மாற்றமும்
4. அரசியலில் அறம்
5. இளைஞர்கள் வாழ்வில் இணையத் தாக்கம்
6. இனிமைத் தமிழ் மொழி எமது
விதிமுறைகள்
1. இத்தலைப்புகள் சென்னை மண்டலத்திற்கானது மட்டுமே.
2. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் குலுக்கல் முறையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்பில் பேச வேண்டும்.
3. இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும் பங்கேற்கலாம்.
4. வயது வரம்பு 18 முதல் 25 வரை (ஏப்ரல் 30, 2025க்குள்) 25 வயதுக்கு உட்பட்டவராக இருந்தல் வேண்டும்.
5. போட்டியாளர் காலை 9 மணிக்குள்ளாகப் போட்டி நடைபெறும் கல்லூரிக்கு வரவேண்டும்.
6. மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனம் இருக்கும் மாவட்டமே அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்டதாகும்.
7. கால அளவு 4 நிமிடங்கள்
8. நடுவர்களையோ, தன்னைப் பற்றியோ குறிப்பிடாமல் நேரடியாகத் தலைப்பையொட்டிப் பேச வேண்டும்.
9. நடுவர்களின் முடிவே இறுதியானது.
கூடுதல் விவரங்களுக்கு 044 27417375, 2741 7376, 2741 7377, 2471 7378 ஆகிய எண்களில் அல்லது tamilperayam@srmist.edu.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.