கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும் : ராமானுஜ ஜீயர் !
Ramanuja Jeeyar
Tamil Nadu Government
By Irumporai
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்திற்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கோயில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற வேண்டும்.
நடைமுறைகளை மாற்றக்கூடாது. பாரம்பரிய முறைகளை மாற்றுவது தமிழக அரசிற்கு நல்லது கிடையாது. இந்த ஆணையை தமிழக அரசு நீக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போடுவார் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்