கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்ட ஜீயர் - பொதுமக்கள் அதிர்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.
இந்திய நாட்டில் சாதுக்களும், சந்நியாசிகளும் ஆண்டு தோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கி கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கம்.
இவ்விரத நாள்களின் போது சந்நியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை கடைபிடித்து வருவார்கள் அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இந்த விரதத்தினை உத்திரப்பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தங்கியிருந்து கடைபிடித்து வருகிறார்.
அப்போது வட மாநிலங்களில் சாதுக்களும், சந்நியாசிகளும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாடிகள், அவர்கள் பிடித்த பாம்பை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாக பாம்பினை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனை சுவாமிகளும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆசி வழங்கினர்.