கடவுளை இழிவுபடுத்துவோரை தண்டிக்க தனி சட்டம் வேண்டும்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு கருத்து
By Irumporai
கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஜீயர் கருத்து
உலகம் வழங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனி சட்டம் வேண்டும்
மேலும் கடவுளை இழிவாக பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் உலக அளவில் இந்து மதம் குறித்து தவறாக பேசுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்