அம்மாவின் சொன்ன வார்த்தை... அதோட போனவரு தான் கமல் - காதல் முறிவு குறித்து ஸ்ரீவித்யா..!!
நடிகை ஸ்ரீவித்யா நடிகர் கமல் இருவரும் காதலித்தது தொடர்பான செய்திகள் அன்றைய காலகட்டத்தில் பெரும் தலைப்புச் செய்தியாக இருந்த ஒன்று.
கமல் - ஸ்ரீவித்யா
நடிகை ஸ்ரீவித்யா 1970 ஆம் ஆண்டு 'லெட்சுமி வந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களுடன் பல படங்களில் நடித்துள்ள இவருக்கும் அப்போது உச்சத்தில் இருந்து நடிகரான கமலுடன் காதல் வயப்பட்டார்.
இந்த தகவல் அந்த காலகட்டங்களில் பெரிதும் பேசப்பட்ட தலைப்பாகவே இருந்தது. காரணம் இருவருமே முக்கிய முன்னணி நடிகர்களாக அப்போது இருந்தனர். ஆனால் இவர்களது காதல் சிறிது காலத்திலேயே முறிந்து போனது.
ஸ்ரீவித்யா உருக்கம்
இது குறித்து உருக்கமாக மலையாள பேட்டி ஒன்றில் ஸ்ரீவித்யா மனம்திறந்து பேசியிருக்கின்றார். அந்த பேட்டியில் பேசும் போது, ஸ்ரீவித்யா, நாங்கள் பழகியது அனைவருக்குமே தெரியும் என்றும் இருவர் வீட்டாருக்கும் இந்த செய்திகள் தெரியும் என்றும் கூறினார்.
அவர்கள் நாங்கள் திருமண செய்து கொள்ள வேண்டும் என விரும்பியதாக குறிப்பிட்ட ஸ்ரீவித்யா, ஆனால் ஒரு நாள் எனது தாயார் கமலிடம் பேசியது அவருக்கு மனவருத்தத்தை கொடுக்க அவர் என்னிடம் நீண்ட காலமாகவே பேசவில்லை என குறிப்பிட்டார்.
அதன் பிறகு பெரிய இடத்திற்கு சென்ற கமல் ஒரு நாள் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்தியை தெரிந்து கொண்ட நான் என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு சென்றதை கூறி, மொத்தமாக கமலை இழந்ததாக ஸ்ரீவித்யா நினைவுகூர்ந்திருந்தார்.
I Lost Him Forever ? pic.twitter.com/55O0leqRff
— Monkey Cinema (@monkey_cinema) December 31, 2023