கோயிலில் சன்னி லியோன் பாட்டுக்கு ஆட்டம் - ஊழியர்கள் டிஸ்மிஸ்!
சன்னி லியோன் பாடலுக்கு ஆபாசமாக நடனமாடிய 5 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மல்லிகார்ஜுன சுவாமி கோவில்
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில். அங்கு கோவிலுடன் இணைந்த இலவச உணவு வழங்கும் மையமான 'மல்லிகார்ஜுன அன்னசத்ரா'-வில்

பணியாற்றும் ஊழியர்கள் சிலர் சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனமாடியுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோக்கள் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோவிலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாபு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 5 ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஊழியர்கள் பணிநீக்கம்
இது குறித்து ஸ்ரீசைலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், கோவில் மற்றும் அதனைச் சார்ந்த வளாகங்களில் நடனமாடுவதோ அல்லது ரீல்ஸ் எடுப்பதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புனிதமான இந்த இடத்தில் இத்தகைய அநாகரீகமான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் மல்லிகார்ஜுன அன்னசத்ரா தலைவர் ஷியாம் கூறுகையில், "ஊழியர்களின் இந்தச் செயல் பக்தர்களின் மனோபாவத்தைப் புண்படுத்தியுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து அந்த 5 ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்," என தெரிவித்துள்ளார்.