பொண்ணு வயசு - இப்படிலாம் ஆசை படலாமா..? ரஜினி நண்பர் குறித்து ஸ்ரீரெட்டி ஆவேசம்

Keerthy Suresh Chiranjeevi
By Karthick Dec 29, 2023 02:30 PM GMT
Report

நடிகர் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் குறித்து தெரிவித்த கருத்தை நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சிரஞ்சீவி

தமிழில் அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படமானது தெலுங்கில் ‘போலோ ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி ஆகஸ்ட் 10-ல் வெளியாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

srireddy-angry-comments-on-chiranjeevi-keerthy

இதன் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது, பேசிய சிரஞ்சீவி “இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி எனக்கு தங்கை. அடுத்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பார்” என நகைச்சுவையாகக் கூறினார்.

சாடிய ஸ்ரீரெட்டி

இதற்கு நடிகை ஸ்ரீரெட்டி, “சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன் மகள் வயதுள்ள நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இப்படியான ஜோக்குகளை எப்படிச் சொல்ல முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

srireddy-angry-comments-on-chiranjeevi-keerthy

நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை சொல்லி கவனம் ஈர்த்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் இயக்குநர்கள் சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மீதும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீதும் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.