கோவிலில் ஆனந்த குளியலிட்ட யானைகள் - கண்ணை கவரும் வீடியோ

rain temple elephants srirangam enjoying
By Anupriyamkumaresan Aug 22, 2021 08:20 AM GMT
Report

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 2 யானைகள் மழைநீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த காட்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையால் உற்சாகமடைந்த ஸ்ரீரங்கம் கோவில் யானைகள், ஆனந்த குளியலிட்டனர்.

கோவிலில் ஆனந்த குளியலிட்ட யானைகள் - கண்ணை கவரும் வீடியோ | Srirangam Temple Elephants Enjoying Rain In Trichy

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகளான லட்சுமி, ஆண்டாள் மழையை கண்டதும் துள்ளி குதிப்பது வழக்கமாம்.

இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் ஆனந்தமாக இருவரும் ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.