பிரபல நடிகையின் தாய் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
நடிகை ஸ்ரீப்ரியாவின் தாய் கிரிஜா பக்கிரிசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
ஸ்ரீப்ரியா
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீப்ரியா. இவர் முருகன் காட்டிய வழி திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னனி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், தயாரிப்பு, இயக்கம், என பன்முகத்தன்மையுடன் விளங்கினார். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இவரது தாய் கிரிஜா பக்கிரிசாமி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
தாய் மறைவு
அவருக்கு வயது 81. இவர் புகழ்பெற்ற பரத கலைஞரான காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி. காதோடு தான் நான் பேசுவேன் படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், நீயா, நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.