நீங்க மீண்டும் சேர்ந்தீட்டிங்களா? கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகையிடம் சண்டை போடும் ஸ்ரீநிதி
குழந்தை நடசத்திரமாக அறிமுகமான ஸ்ரீநிதி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நண்பர்களாக சுற்றி திரிந்த நக்ஷத்திரா மற்றும் ஸ்ரீநிதி
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அண்மையில் நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே சீரியல் நடிகை நக்ஷத்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருந்தார் ஸ்ரீநிதி. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாராடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நக்ஷத்ரா.
யாராடி மோகினி சீரியல்களில் இணைந்து நடிப்பதால் நண்பர்களாக சுற்றி திரிந்தவர்கள் தான் நடிகை நக்ஷத்திரா மற்றும் ஸ்ரீநிதி.
வெடித்த சண்டை - மீண்டும் ஒன்று சேர்ந்தாச்சு
இருவரும் சின்னத்திரையில் இருக்கும் போது நண்பர்களாக இருந்த நிலையில், நக்ஷத்திரா திருமணத்தின் போது இருவருக்கும் இடையில் பலத்த சண்டை வெடித்ததை தொடர்ந்து ஸ்ரீநிதி நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும், அவர் வீட்டின் முன் நின்று போராட்டம் செய்வதாகவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது நடிகை நக்ஷத்திரா திருமணம் முடித்து கர்ப்பமாக உள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததிலிருந்து அவருடைய பழைய சீரியல்களில் நடிகைகள் எல்லாம் மீண்டும் சேர ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனிடையே இவர்கள் சேர்ந்து செய்யும் சேட்டைகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.
நடிகை நக்ஷத்திரா மற்றும் ஸ்ரீநிதி இருவரும் ஒன்றாக மீண்டும் சேர்ந்த நிலையில், இருவரும் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.