முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கும் ஸ்ரீமதியின் தாயார்
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வரும் சனிக்கிழமை ஸ்ரீமதியின் தாயார் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைபல்ளியில் உள்ள விடுதியில் ஸ்ரீமதி என்ற மாணவி இறந்த விவகாரம் கள்ளகுறிச்சியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குழுவினர் மாணவி ஸ்ரீமதியின் உடலை ஆய்வு செய்து அதன் அறிக்கைகளை நீதி மன்றத்தில் வழங்கினர்.

அதே சமயம் ஸ்ரீமதியின் தோழிகளிடமும் ரகசியமாக வாக்கு மூலம் பெற்றதாக தகவல் வெளியான நிலையில் ஸ்ரீமதியின் தாயார் செல்வி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
முதலமைச்சரை சந்திக்கும் ஸ்ரீமதியின் தாயார்
அப்போது அவர் ஸ்ரீமதி இறந்து 43 நாட்களாகியும் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள மாணவிகள் யார் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் எனது மகள் ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பதை எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்களின் விவரங்களை நாங்கள் ரகசியம் காப்போம்.
மேலும் எனது மகள் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளியே வர வேண்டும். இதற்காக நீதி கேட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எனது சொந்த கிராமமான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் இருந்து நானும், எனது கணவரும் நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், அதை ரத்து செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil