முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர் மாணவி ஸ்ரீமதி பெற்றோர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புகார் மனு அளித்தார் மாணவி ஸ்ரீமதி பெற்றோர்.
கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த நிலையில் மாணவியின் மரணத்தில் மரணம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பாக பெற்றோர் நீதிமன்றத்தில் மாணவியின் உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் குழுவை ஒன்றை நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் உடலை நல்லடக்கம் செய்தனர்.
மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் வந்த மாணவி ஸ்ரீமதி தாய், தந்தை, தம்பி உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டர் உடன் இருந்தனர்.