என் பொண்ணு உடல்ல பற்கள் பதிந்த அடையாளம் இருந்தது : கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீமதியின் தாயார்
தனது மகளின் மரணத்தில் பல செய்திகள் மறைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கூட வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி களவரம்
இந்த சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது,உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பள்ளிக்கூடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என பள்ளி நிர்வாகம் கூறினாலும், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் செல்வி தெரிவித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்களை தீக்கிரையாக்கினர், இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ம்ற்றும் இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி போலீஸ் வசம் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஸ்ரீமதியின் தாயார் நேரில் சந்தித்து தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஸ்ரீமதி மரணத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு ஸ்ரீமதி தாயார் பேட்டியளித்துள்ளார்.
PostMortem ரிப்போர்ட் மர்மங்கள்
அதில், தனது மகளின் மரணத்தில் ,மர்மம் இருப்பதாக கூறினார், மேலும் PostMortem ரிப்போர்ட்-ல் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த பள்ளி நிர்வாகம் குறித்து சந்தேகப்படுவதாக கூறிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுவது சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டினால் நர பலி கொடுப்பார்கள் என கூறுகின்றனர் .
மேலும் அந்த பள்ளியில் நிறைய தவறுகள் நடக்கும், அங்கு கல்வி நிறுவனம் இயங்கவில்லை லாட்ஜ் தான் இயங்குகின்றது, முறையற்ற உறவுகளும் அங்கு நடக்கின்றது என பகீர் குற்றச்சாட்டை கூறினார். இங்கு நடக்கும் சில தவறுகள் மாணவர்கள் கண்ணில் பட்டால் அவர்களை அந்த மாணவனை உயிரோடு வைத்து கொன்றுவிடுவார்கள் என கூறிய செல்வி தன் மகள் தற்கொலை செய்யவில்லை என்பதை கண்ணீருடன் கூறுகின்றார்.
அதோடு இறந்த தனது மகளின் உடலின் சில இடங்களில் நகக் கீரல்கள் இருந்ததாகவும் கழுத்து பகுதியில் பற்கள் பதிந்து இருந்ததாகவும் தனது மகளை திட்டமிட்டே பள்ளி கொலை செய்துள்ளதாக கூறும் ஸ்ரீமதியின் தாயார் செல்வி.
தனது மகள் மரணத்திற்கு நியாயம் கிடைத்தால் இந் நாட்டில் உள்ள மற்ற பெண் பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்கும் என்று கண்ணீருடன் கூறுகின்றார்.