இந்த கலவரத்துக்கு ஸ்ரீமதி அம்மாதான் காரணம் : பள்ளி செயலாளர் பரபரப்பு வீடியோ

By Irumporai Jul 17, 2022 12:35 PM GMT
Report

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணவி மரணம்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்துக்கு ஸ்ரீமதி அம்மாதான் காரணம் :  பள்ளி செயலாளர் பரபரப்பு வீடியோ | Srimathi Explanation Kallakurichi Incident

இந்த கலவரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலதுறையினர் சிலர் காயமடைந்தனர். மேலும் , போரட்டக்காரர்கள் சிலர் காவல் துறையின் வகனங்களை தாக்கினர், அதே சமயம் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

கலவரமான கள்ளக்குறிச்சி

பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த நிலையில் போரட்டம் கலவறமானது குறித்து பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இந்த சம்பவத்தில் எதையும் நாங்கள் மறைக்கவில்லை.

ஸ்ரீமதியின் அம்மா செல்வி எங்களை பார்க்கவில்லை என கூறினார்கள். நாங்கள் காவல்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளோம். அப்படி இருக்கையில் சமூக வலைத்தளத்தில் பொய் தகவலை பரப்பி இன்னைக்கு இப்படி வன்முறையை ஏன் ஏற்படுத்த காரணம் என்ன?.

சாந்தி விளக்கமளித்து வீடியோ 

பள்ளி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தி 1998 ஆம் ஆண்டு முதல் பெற்று வந்த நல்ல பெயரை கெடுத்து விட்டீர்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தூண்டிவிட்டு பள்ளி வாகனங்கள், படிப்பதற்கான உபகரணங்கள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான சான்றிதழ்களை எரித்து வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள்.

இவை அனைத்திற்கும் ஸ்ரீமதியின் அம்மா தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். வன்முறையால் 3500 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஸ்ரீமதியின் அம்மா சொன்னது எல்லாம் தவறான தகவல்கள்.

மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றால் அவரின் செல்போனையும், ஸ்ரீமதியின் செல்போன் எண்ணையும் சோதனை செய்தால் கிடைக்கும். பள்ளிக்கும் மாணவி மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிந்து கொள்ளலாம் என சாந்தி தெரிவித்துள்ளார்.