ஸ்ரீமதியின் உடலை நான்கு பேர் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பொய்யானது - தாய் பரபரப்பு பேட்டி..!

Kallakurichi School Death Kallakurichi
By Thahir Aug 04, 2022 05:58 AM GMT
Report

ஸ்ரீமதி உடலை நான்கு பேர் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியான நிலையில் அந்த வீடியோ பொய்யானது என தாய் தெரிவித்துள்ளார்.

தாய் பரபரப்பு பேட்டி 

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  அவர் கூறுகையில் இன்று இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோர் ஏன் என் மகள் இறந்த அன்று ஜூலை 13-ஆம் தேதியே எங்களிடம் காண்பிக்கவில்லை.

Srimati CCTV

மேலும் எங்களிடம் ஜூலை 13-ஆம் தேதி ஒரு நிமிட காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சியை 3.30 மணிக்கு காண்பித்தார்கள், அதில் எனது மகளை தூக்கி செல்வது போல் எதுவுமே இல்லை.

இந்நிலையில் இந்த சிசிடிவி பதிவு காட்சிகளை யார் வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று வெளியான சிசிடிவி காட்சி அப்பட்டமான பொய் என்று உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் கூறியுள்ளார்.