மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்குகாரணம் இதுதான் : மாணவியின் தோழிகள் ரகசிய வாக்குமூலம்

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Aug 23, 2022 05:19 AM GMT
Report

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் , இறந்த ஸ்ரீமதி உடன் படித்த இரண்டு மாணவிகள் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மர்ம மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்குகாரணம் இதுதான் :   மாணவியின் தோழிகள்  ரகசிய வாக்குமூலம் | Srimathi Case The Friends Confidential Statement

தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றேர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில், மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஜூலை 23-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

மாணவியின் தோழிகள் பரபரப்பு வாக்குமூலம்

இந்நிலையில், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் மாணவி ஸ்ரீமதியுடன் விடுதி அறையில் தங்கியிருந்த நெருங்கிய தோழிகளான 2 மாணவிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்குகாரணம் இதுதான் :   மாணவியின் தோழிகள்  ரகசிய வாக்குமூலம் | Srimathi Case The Friends Confidential Statement

அப்போது, இறப்பதற்கு முன்பு ஸ்ரீமதி என்ன மனநிலையில் இருந்தார். அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்ததா? யாராவது டார்ச்சர் செய்தார்களா? விடுதியில் நடந்த சம்பவம் ஆகியவை குறித்து மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது