மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கு; அவதுாறு பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு செக்

Kallakurichi School Death Kallakurichi
By Thahir 1 வாரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதுாறு பரப்பியதாக 6 யூடியூப் சேனல்களிடம் விளக்கம் கேட்டு சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

யூடியூப் சேனல்களுக்கு சம்மன் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் சமூகவலைத்தளத்தில் அவதுாறு பரப்பியவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கு; அவதுாறு பரப்பிய 6 யூடியூப் சேனல்களுக்கு செக் | Srimathi Case Summons 6 Youtube Channels

மேலும் மாணவியின் மரணம் தொடர்பாக யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் உண்மைக்கு புறம்பாக அவதுாறு பரபரப்பியதாக 6 யூடியூப் சேனல்களுக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.