ஸ்ரீமதியை தூக்கிச்செல்லும் ஆசிரியர்கள் : புதிய சிசிடிவி வீடியோவால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி அன்று 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் கலவரமாக மாறியது.
கள்ளக்குறிச்சி கலவரம்
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளியான சிசிடிவி காட்சி
இந்த நிலையில் பள்ளி மாணவியின் உயிரிழப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த பிறகு கடந்த ஜூலை 13ஆம் தேதி காலை 5.24 மணி அளவில் பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் மூன்று ஆசிரியர்கள் பள்ளி மாணவியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பள்ளி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு வெளியாகி வரும் சிசிடிவிகள் யார் மூலமாக வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.