ஸ்ரீமதி மரண விவகாரம் : யூடியூப் சேனல்களுக்கு சிபிசிஐடி எச்சரிக்கை

Kallakurichi School Death Kallakurichi
By Irumporai Aug 05, 2022 07:11 PM GMT
Report

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டகிறது.

மாணவி மரணம்

குற்றப்பிரிவு புலனாய்வு துறையின் புலன் விசாரணை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீமதி மரண விவகாரம் : யூடியூப் சேனல்களுக்கு சிபிசிஐடி எச்சரிக்கை | Srimathi Case Cbcid Warning To Youtube

கள்ளக்குறிச்சி குற்ற சம்பவம் தொடர்பாக தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

சிபிசிஐடி எச்சரிக்கை

மேலும்,தங்களது விசாரணை பாதிக்கும் வகையில் புலன் விசாரணை மேற்கொண்டால் அவர்களது வலைதள பக்கம் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீ மதி இறந்தது தொடர்பான வழக்கு குறித்து யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் அலைபேசி எண் 9003848126-க்கு நேரடியாக பகிரும்படி வேண்டி கேட்டு கொள்வதாக சிபிசிஐடி போலிசார் அறிவித்துள்ளனர்.