கிறிஸ்துமஸ் பண்டிகை - 1000 சிறை கைதிகளை அதிரடியாக விடுவித்தது அரசு..!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள 1000க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1004 பேர்
விடுதலை நாட்டின் முக்கிய நாட்களில் பொது மன்னிப்பு கோரும் கைதிகளுக்கு விடுதலை வழங்குவதை பல நாடுகளும் வழக்கத்தில் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்தநாள், குடியரசு தினம் போன்ற தினங்களில் கைதிகள் விடுதலையாவது சகஜம். இந்நிலையில் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை 1000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது இலங்கை அரசு.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்துள்ள உத்தரவில் 1004 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
பொதுமன்னிப்பு
நேற்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது ராணுவ ஆதரவுடன் போலிசார் கிட்டத்தட்ட 15000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.