நடுரோட்டில் தம் அடித்து சிக்கிய இலங்கை வீரர்கள் : பெரிய மனசு காட்டிய இலங்கை கிரிக்கெட் வாரியம், நடந்தது என்ன?
டெல்டா கொரோனா வகையால் அவதிப்பட்டு வந்த காலம் அது. அப்போது கடும் இன்னல்களுக்கு இடையே இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. கொரோனா அச்சுறுத்தலால் கடும் பயோ பபுள் விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் அதனையும் மீறி இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது இதனையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி மொத்த அணியையும் மாற்றி, புதிய அணியை களமிறக்கியது.
அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த தொடர் நடந்தது. ஆனால் இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், குணதிலகா, குசேல் மெண்டீஸ், டிக்வெல்லா ஆகியோர் பயோ பபுளை மீறி ஊர் சுற்றினர்.
அப்படி செய்தாலும் பரவாயில்லை, நடுரோட்டில் நின்று மூன்று பேரும் புகைபிடித்தனர் , இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது ஒரு ஆண்டு தடை இலங்கை அணியோ அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இதனால் ரசிகர்கள் ஏற்கனவே கடும் கோபத்தில் இருக்க , இலங்கை வீரர்களின் செயல் மேலும் எரிச்சல் அடைய செய்தது. இதனையடுத்து மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு ஆண்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு, மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
தடைக்காலத்தில் வீரர்கள் மனதளவில் பாதிக்க கூடாது என்பதால் மூவருக்கும் மனநல மருத்துவ சிகிச்சை இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்பட்டது. இதனிடையே மூன்று பேரும் தங்கள் மீதான தடையை விலக்கி கொள்ள வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்ததனர்.
இதனை ஏற்று கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களின் தடையை நீக்கியது. வீரர்களுக்கு எச்சரிக்கை இதனையடுத்து 3 பேரும், 6 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் முதலில் விளையாடி தங்களது ஃபார்மை வீரர்கள் உறுதி செய்தால், தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வரும் 6 மாதங்களில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் மீது ஏதேனும் புகார் இருந்தால் , அவர்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.