கடும் பொருளாதார நெருக்கடி: மீண்டும் அகதியாகும் இலங்கை தமிழர்கள்

financialcrisis srilankantamils refugeesafter12yrs
By Swetha Subash Mar 23, 2022 01:54 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அகதியாக தஞ்சம் தேடும் மக்கள்!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி மக்கள் வருகை தந்து உள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள், காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நேற்றைய முன் நாள் இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சாதாரண ப்ளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடி நடுக்கடலில் உள்ள மணல் திட்டுக்கு வந்திருந்தனர்.

இவர்களை இறக்கி விட்டு அந்த படகோட்டிகள் மீண்டும் இலங்கை திரும்பியதாக தெரிகிறது. தமிழக மீனவர்கள் மூலம் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டதன் மூலம்,

இந்திய கடலோர காவல்படையினர் வந்திருந்த தமிழர்கள் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்.

இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வந்தவர்களிடம், கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது,

இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுடன் வந்த பெண் கியூரி ரூ.1 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கஜேந்திரன், அவருடைய மனைவி மேரி கிளாரா மற்றும் கியூரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மேலும் 5 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 10 பேர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வருகை தந்து உள்ளனர்.

நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த நிலையில்,

பல மணி நேர முயற்சிக்கு பின் என்ஜின் சரி செய்து செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப்போரின் போது அகதிகளாய் வந்த பின் 2012இல் மீண்டும் இலங்கை சென்று வாழ்ந்து வந்தவர்கள் தற்போது உணவு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மீண்டும் தமிழகத்தை நோக்கி அகதியாய் வந்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலையில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைய உள்ளதாகவும்,

எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக தமிழக்ததிற்கு அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர்.