கனடாவில் பல இன்னல்களை தாண்டி சாதனைப் படைத்த இலங்கைத் தமிழ்ப்பெண்!
கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழ் பெண்ணான மீரா பாலா. இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்க் கனேடிய எழுத்தாளர். மீரா சிறுவர் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறார். மீரா, இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தபோது, தான் எதிர்கொண்ட போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, சமீபத்தில் Palm Trees Under Snow என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். தற்போது மீரா எழுதிய இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையில் வாழ்ந்த மாயா என்ற 9 வயது சிறுமியை மையமாக கொண்டு இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் மீரா. அந்த புத்தகத்தில், மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த வீட்டின் அருகில் தன் நாடு போரால் சின்னபின்னமாவதை மாயா நேரில் காண்கிறார். அமைதியும் பாதுகாப்பும் நாடி கனடாவுக்கு புலம்பெயர்கிறது மாயாவின் குடும்பம். கனடாவுக்கு வந்தால், அவளால் ஆங்கிலமும், பிரெஞ்சு மொழியும் பேசும் சக மாணவர்களுடன் பேச முடியாமல் தவிக்கிறார். யாரும் அவளிடம் பேச முன்வரவில்லை. புத்தகத்தில் இடம்பெற்ற மாயாவின் கதாபாத்திரம் உண்மையில் அது மீராவின் கதை தான்.
மீரா 9 வயதாக இருக்கும்போது உள்நாட்டு போரால் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தன்னை மற்ற மாணவ-மாணவிகள் ஒதுக்கி வைப்பதையும், வம்புக்கிழுப்பதையும் அனுபவிக்கிறார். 1980ம் ஆண்டு, மீரா இலங்கையிலிருந்து ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவில் அதிகம் இல்லை.
மீராவின் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் மீராவைப் பார்த்து, 'உன் நாட்டுக்குத் திரும்பிப்போ' என கத்துவார்கள். அப்போது அவர்கள் கூச்சல் போடும்போது செய்வதென்றே தெரியாமல் திகைத்து அழுவாளாம் மீரா. ஒரு முறை கண்ணீர் விட்டுக் கதறி, தன் பெற்றோரைப் பார்த்து, நம் நாட்டுக்குப் போவோம் வாருங்கள் என மீரா அழைக்க, இதுதான் நம் புதிய தாய்நாடு, நீ கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே எல்லாம் சரியாகும் என்று பெற்றோர்கள் கூறிவிடுகிறார்கள்.
பின்னர் அதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்கிறார் மீரா. ஆங்கிலம் படிப்பதன் மூலம் தைரியத்தை வளர்த்துக்கொள்கிறாள். அதற்குப் பின் மற்ற மாணவ-மாணவிகள், உன் நாட்டுக்கு திரும்பிப்போ என கத்தும்போது, நான் போகமாட்டேன், இதுதான் என் புது தாய்நாடு என்று தைரியமாக பதிலளித்திருக்கிறாள். தன்னிடம் கத்தியவர்களிடம் பதிலுக்கு ஆங்கிலத்தில் கத்திய பிறகுதான் நிமிர்ந்து நிற்பதாக முதன்முறையாக அந்த புத்தகத்தில் உணர்ந்திருக்கிறாள் மீரா.
இதுகுறித்து மீரா பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் நான் அனுபவித்த அதே பிரச்சினைகளை இன்றும் அனுபவிக்கும் புலம்பெயர்ந்த சிறுவர் சிறுமியரை தினமும் பார்க்கிறேன்.
என் வகுப்பில் ஏராளம் ஆசிய நாட்டவர்களான மாணவர்கள் உள்ளனர். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக எடுக்கும் மாணவர்கள் மற்றவர்களை விட குறைந்தவர்கள் என யாராவது கூறினால், நான் அவர்களுக்கு என்னுடைய கதையைக் கூறுவேன் என்றார்.