இலங்கை தமிழர்கள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்திற்கு வரும் இலங்கை அகதிகள் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்கலாம் என்றும் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர்.
இதுவரை 40 பேருக்கும் அதிகமானோர் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.இந்நிலையில் தமிழகம் வந்துள்ள பல இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பங்களில் சிறுவர்கள் உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக இலங்கை தமிழர்கள் அதிகமானோர் தமிழகத்திற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதலே அவர்கள் சேர்ந்து படிக்க தேவையான உதவிகள் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.