கண்ணா கொஞ்சம் இங்கே பாரு : மாயாஜால இலங்கை ஸ்பின்னரை தட்டி தூக்கிய சிஎஸ்கே
ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டால் மும்பை, சிஎஸ்கே மீது தான் அனைத்து கவனமும் குவியும். இதில் சிஎஸ்கேவை எடுத்துக்கொண்டால் சஹார், தாக்கூரை உதாரணமாக சொல்லலாம்.
இந்தியா மட்டுமில்லாமல் வேறு நாடுகளில் இருக்கும் வீரர்களின் திறமைகளையும் இனங்கண்டு தட்டித்தூக்கி விடுவதில் வல்லவர்கள் நம்ம சிஎஸ்கே இந்த நிலையில் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் மும்பையும் சிஎஸ்கேவும் யாரை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புதான் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அந்த வகையில் நேற்று பழைய வீரர்களை மீண்டும் அழைத்து வந்தது சிஎஸ்கே. பிராவோ, ராயுடு, சஹர், உத்தப்பாவை தட்டித்தூக்கியது.
ஆனால் முக்கிய தூண்களான டுபிளெசிஸ், தாக்கூர், ஹசில்வுட்டை மிஸ் செய்தது. இந்த நிலையில் இன்றைய ஏலத்தில் முதல் டார்க்கெட்டாக ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
Maheesh into the #Yellove fam! ?#SuperAuction #WhistlePodu ?? pic.twitter.com/KF5yK6STgt
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 13, 2022
ஒரு காலத்தில் இலங்கை வீரர்கள் சிஎஸ்கே அணியில் முத்தையா முரளிதரன். சூரஜ் ரந்திவ் உள்ளிட்டோர் அணியின் முக்கியவத்துவம் வாய்ந்த வீரர்களாக இருந்தனர்.
ஆனால் தமிழகம்-இலங்கை மோதல் காரணமாக நீண்ட ஆண்டுகளாக இலங்கை வீரர் ஒருவரை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கவில்லை. 2013ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது தான் சிஎஸ்கே ஒரு இலங்கை வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது.
மஹேஷ் தீக்ஷனா mystery spinner என்றழைக்கப்படுகிறார். அதாவது இவரது பந்தை பேட்ஸ்மேன்களால் கணிக்கவே முடியாது.இவரை ரூ.70 லட்சத்திற்கு சிஎஸ்கே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற அணிகள் வெளிநாட்டு வீரர்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுக்க கோடிக்கும் குறைவாக வெளிநாட்டு வீரரை எடுத்திருக்கிறது சிஎஸ்கே.
இதன் மூலம் சிஎஸ்கேவின் உண்மையான முகம் இது தான். பக்கா பிளானில் சிஎஸ்கே களமிறங்கியிருப்பதாகக் கூறி தோனியின் மூவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.