தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!!
இரா. சம்பந்தன்
இலங்கையில் தமிழர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்பவர் இரா. சம்பந்தன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அவர், வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சையில் இருந்து அவர், உடல் நலம் மோசமடைந்ததன் காரணமாக, இன்று காலை இயற்கை எய்தினார்.
அவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மரணமடைந்த அவரின் வயது 91. அவரின் மறைவிற்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.