எங்கள் கடல் பரப்பில் தமிழக மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது : இலங்கை அமைச்சர் எச்சரிக்கை

By Irumporai 2 வாரங்கள் முன்
Report

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது என இலங்கை மீன் வளத்துறையமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு அனுமதி

தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது இலங்கை மீன்வளத்துறையமைச்சர் டக்ளஸ் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துறையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார் அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை எனக் கூறினார்.

உண்மைய எழுதுங்கள்

தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் எனக் கூறினார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.