அத்துமீறும் தமிழக மீனவர்கள்..கண்ணீர் சிந்தும் இலங்கை மீனவர்கள் - காரணம் என்ன?
இலங்கை கடற்பகுதிக்கு செல்லும் தமிழக மீனவர்கள் அவர்களின் வலைகளை சேதப்படுத்திவிட்டு திரும்புவதால் வாழ்வாதரம் இன்றி தவிப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அண்மைகாலமாக இலங்கை கடற்பகுதியான மன்னர் வளைகுடா பகுதிக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் ராட்சத படகில் சென்று மீன் பிடிப்பதாக அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் வரும் படகில் உள்ள ரோலர் கடல் பகுதியில் விரித்து வைக்கபட்டுள்ள மீனவ வலைகளை அறுத்து சேதப்படுத்திவிட்டு செல்வதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் நாட்டு விதவை பெண்கள் வலைகளை திரிப்பது தான் அவர்களின் பிரதான தொழிலாளாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் வலைகளை சேதப்படுத்திவிட்டு செல்வதால் மன்னர் வளைகுடா பகுதி மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதனால் விதவை பெண்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உமாகரண் ராசய்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் எங்கள் சந்ததியினர் மீனவனாக பிழைப்பது எப்படி? என கேள்வி எழுப்பும் அவர்
கலவரங்களால்,சுனாமியால்,யுத்தத்தால் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். எங்கள் தொப்புள் கொடி உறவுகளான உங்களால் அழிவு நிலை வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இச்சம்வம் பற்றி இலங்கை மீனவ அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறும் அவர்கள் தமிழக மீனவர்கள் இது போன்று விதிமுறைகளை மீறி மீன் பிடிப்பதையும் எங்கள் வலைகளை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுகின்றனர்.