நாடு திரும்ப போவதில்லை - தற்கொலை செய்த இலங்கை தமிழர்!
வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இலங்கை மக்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரம் தேடி இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். தொடர்ந்து, இலங்கை சேர்ந்த அகதிகள் 300 க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு
கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. அது தென்கிழக்கு ஆசிய நாடான ஃபிலிப்பைன்ஸ் கடல் எல்லையில் பயணித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் கப்பல் பழுதாகி நின்றது.
உயிரிழப்பு
இதனால் அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நடுக்கடலில் தத்தளித்தனர். அதனையடுத்து, அவர்கள் சிங்கப்பூர் அதிகரிகளால் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவர்கள் தங்களை ஐ.நாவிடம் ஒப்படைக்குமாறு 20 நாட்களாக போராட்டம் நடத்தி கோரிக்கை வைத்தனர் . அதில் தாம் நாடு திரும்ப போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்கொலைக்கு முயன்றவர்களில் யாழ்பானத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.