அனைவருக்கும் உதவிடுங்கள்;இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்!

Srilanka Tamil Alliance National Request MKStalin
By Thahir Apr 09, 2022 10:08 AM GMT
Report

இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவிட கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவுவது குறித்து தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

நாடு ஒன்றுபட்டிருக்கும் வேளையில்,தமிழ் மக்களுக்கு மட்டும் உதவுவது,நாட்டுக்குள் பிளவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில்,அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் இந்த வேளையில் தமிழர்களுக்கு மட்டும் உதவுவது பிரிவினையை ஏற்படுத்தும்.

எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.