இந்தியாவிற்கு எதிராக டெஸ்டில் விளையாடும் இலங்கை அணி அறிவிப்பு - யார், யாருக்கு இடம்?
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் மார்ச் 4 ஆம் தேதி மொகாலியிலும், 2வது டெஸ்ட் மார்ச் 12 ஆம் தேதி பெங்களூருவிலும் தொடங்குகிறது.
இந்த போட்டிகளுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வாண்டர்சே முதல்முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இலங்கை அணியில் திமுத் கருணாரத்னே (கேப்டன்), நிசாங்கா, திரிமன்னே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், சன்டிமால், அசலங்கா, டிக்வெல்லா, சமிகா கருணாரத்னே, லாஹிரு குமாரா, லக்மல், சமீரா, விஷ்வா பெர்னாண்டோ, ஜெப்ரி வாண்டர்சே, ஜெயவிக்ரமா, எம்புல்டெனியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.