அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கை... அசத்திய இந்திய வீரர்கள்..
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தன் குவிக்க முடியாமல் திணறியது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அந்த அணியின் கருணாரத்னே 43 , கேப்டன் ஷனகா 39, அசலங்கா 38 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.