இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை: இலங்கை அரசு நடவடிக்கை
இலங்கையில் இஸ்லாமிய பள்ளிகளை மூடவும்,பெண்கள் புர்கா அணியவும் தடை விதிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் ஆயிரக்கணக்கான இஸ்மாமிய பள்ளிகள் மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது சிறுபான்மை விரோத நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிதுள்ளனர். இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெள்ளிக்கிழமை இதுதொடர்பான அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், இதற்கு அந்நாட்டு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
``நம்முடைய தொடக்க காலங்களில் எந்த முஸ்ஸிம் பெண்களும் புர்கா அணியவில்லை. இந்த மத அடிப்படைவாதம் அண்மையில் தான் தோன்றியது. நாங்கள் இதை நிச்சயமாக தடை செய்வோம்" என்று சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.