உள்ளாடைகள் மூலம் எதிர்ப்பு ...இலங்கையில் அரசுக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்..!
இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் உள்ளாடைகளில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுதி அதை ஆங்காங்கே தொங்கவிட்டு வருவதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.அத்தியாவசிய பொருட்களில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதையடுத்து அந்நாட்டு மக்கள் இலங்கையை ஆளும் அரசுக்கு எதிராக தங்களது போராட்டங்களை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு மக்கள் உள்ளாடைகளில் Go Home GOTA என்ற வாசகங்களை எழுதி ஆங்காங்கே உள்ளாடைகளை வீசி வருகின்றனர்.
இலங்கையில் ஜனதிபதி கோத்தபாய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி போராடாம் ஆனது நடைபெற்று வருகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவர்களை கலைந்து போக சொல்லியும் மாணவர்கள் கலைந்து போகாததால் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டினை
வீசி கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.