இலங்கைக்கு எதிரான போட்டி - இந்திய அணி அபார வெற்றி! விராட் கோலி வாழ்த்து!
இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது.
அசலங்கா 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும் குவித்தனர். 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களம் இறங்கிய இந்திய வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், தீபக் சஹார் ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 49.1 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற இளம் இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Great win by the boys. From a tough situation to pull it off was an amazing effort. Great to watch. Well done DC and Surya. Tremendous knocks under pressure. ??
— Virat Kohli (@imVkohli) July 20, 2021
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இளைஞர்களின் சிறந்த முயற்சி கடினமான சூழலில் அணியை வெற்றி
பாதைக்கு அழைத்து சென்றது என்றும் சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சஹாரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது எனவும்
குறிப்பிட்டுள்ளார்.