இலங்கையில் அதிகாரப் பகிர்வு மூலம் பிரிவினையை அனுமதிக்க மாட்டோம்: இந்தியாவை சாடுகிறாரா ராஜபக்‌ஷே?

srilanka india Gotabaya rajapakasa
By Jon Mar 29, 2021 03:24 PM GMT
Report

இலங்கையில் அதிகாரப் பகிர்வு மூலம் பிற நாடுகள் பிரிவினையைத் தூண்ட அனுமதிக்க மாட்டோம் என அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பெருங்கடலில் உலகப் பேரரசுகள் நடத்தும் அதிகாரப் போட்டியில் இலங்கை ஒரு அங்கமாக இருக்க விருப்பம் இல்லை, இலங்கையின் இறையாண்மையை எதற்கும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷேவின் இந்தக் கருத்து இந்தியாவை மறைமுகமாக சாடுவதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தது. ஆனால் ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளே 13வது சட்டத்திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது என்றும் அதில் தெரிவித்திருந்தது.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Why Modi loves Gota இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது தான் 13வது சட்டத்திருத்தம். அதன் மூலம் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாகாண சபை உருவாக்கப்பட்டு அதிக அதிகாரம் வழங்கப்பட இருந்தது.

ஆனால் இந்த திருத்தங்கள் என்றுமே முழுமையாக அமல்படுத்தப்பட்டதில்லை. இந்தியா இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கோத்தபய ராஜபக்‌ஷே அதிபராக பதவியேற்ற உடனே அதிகாரப் பகிர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். மேலும் 13வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். இந்த சமயத்தில் அதிகாரப் பகிர்வை பிரிவினையுடன் ஒப்பிட்டு ராஜபக்‌ஷே பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு மறைமுகமாக சொல்லப்பட்ட பதிலாகவும் பார்க்கப்படுகிறது.