இலங்கை போராட்ட களத்தில் பாடகர் மரணம்..!

Srilanka Death Protest Crisis Singer Pop மரணம் இலங்கை பாடகர்
By Thahir Apr 13, 2022 03:49 AM GMT
Report

இலங்கை அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்ட களத்தில் பங்கேற்ற ராப் பாடகர்,போராட்ட களத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ராப் பாடகர் ஷராஸ், பாப் மார்லியின் ‘Get up, stand up’ பாடலை பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார்.

பாடல் பாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போராட்டக்களத்தில் பாடகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.