இலங்கையில் ஊரடங்கு உத்தரவால் முக்கிய சாலைகள் வெறிச்சோடின..!

Srilanka Curfew Closed Crisis Order Shops
By Thahir Apr 03, 2022 06:30 AM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.

தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசுக்கு எதிராக பொதுமக்கள் போரட்டத்தை ஒடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.