இலங்கையில் அதிபரின் அதிகாரம் ரத்து? - அரசியல் திருத்த சட்டத்துக்கு இன்று ஒப்புதல்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By Petchi Avudaiappan May 23, 2022 04:51 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் அதிபரின் கட்டுப்பாடுகல் அற்ற அதிகாரத்தை ரத்து செய்யும் வகையிலான அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதிபருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் வழங்கி அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதுவே ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளை பெறவும் வழி வகுத்தது. மேலும் நாடாளுமன்றத்துக்கு அதிபரை விட கூடுதல் அதிகாரங்களை வழங்கிய 19 வது சட்ட திருத்தமும் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இதற்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் தான் என மக்கள் கருதுகின்றனர்.இதனால் மக்கள் போராட்டம் தொடங்கி முற்றிய நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து அங்கு அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதற்கான அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இதற்காக அரசியல் சட்டமைப்பின் 21வது திருத்தத்துக்கான மசோதா அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதலுக்கு வைக்கப்படும். இதனால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.