"சொணமுத்தா போச்சா" - இந்தியாவை வச்சு செய்த இலங்கை அணி
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற நேற்று 2வது டி20 போட்டி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இந்திய வீரர் க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா உறதியானதால் போட்டி இன்றைய தினம் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்களும், தேவ்தத் படிக்கல் 29 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் டி சில்வா 40 ரன்கள் விளாச 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை இலங்கை அணி எளிதாக எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 கணக்கில் சமநிலை வகிக்கின்றன.